சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘பேட்ட’ வரும் பொங்கல் தினத்தில் வெளியாகுமா? வெளியாகாதா? என்ற சந்தேகம் பலரது மனதில் இருந்து வரும் நிலையில் இந்த படம் நிச்சயம் பொங்கலுக்கு வெளிவரும் என்று கார்த்திக் சுப்புராஜ் தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த படத்தின் ஆடியோ ரிலீஸ் டிசம்பர் 9ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என கார்த்திக் சுப்புராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். ஆனால் இந்த டுவிட்டில் பொங்கல் வெளியீடு என்ற வார்த்தை இல்லாததால் ரசிகர்கள் சந்தேகம் அடைந்தனர்.
இந்த சந்தேகத்தை தனது அடுத்த டுவீட்டில் போக்கிய கார்த்திக் சுப்புராஜ் பேட்ட பொங்கல் அன்று வெளிவருவது உறுதி என்றும், அதை குறிப்பிட மறந்துவிட்டேன் என்றும் அறிவித்துள்ளார். இதனால் பேட்ட பொங்கல் தினத்தில் வெளியாவது உறுதியாகியுள்ளது.
Discussion about this post