ராஜிவ் மேனன் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடித்துள்ள சர்வம் தாளமயம் படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.
இந்தப் படத்தில்,ஜிவி பிரகாஷ் உடன் நெடுமுடி வேணு, அபர்ணா பாலமுரளி, வினீத், டிடி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
மிருதங்க வித்வான் ஒருவரிடம் இருந்து கலையை கற்றுக்கொள்ள விரும்புகிறான் பிற்படுத்தப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த இளைஞன். அவனுடைய நிலையைக் காரணம் காட்டி வித்வானிடம் இருந்தும், கர்நாடக இசை சமூகத்தில் இருந்தும் நிராகரிக்கப்படுகிறான் அவன்.
ஜாதிப் பிரச்சினையைத் தாண்டி அவனின் இசை ஆர்வம் நிறைவேறியதா என்பதுதான் படத்தின் கதை. டிசம்பர் வெளியீடாக இப்படம் திரைக்கு வரவுள்ளது. இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இன்று மாலை வெளியான டீசருக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
https://youtu.be/z6OSWotcDnA
Discussion about this post