ஆஸ்திரேலியாவில் உணவை ஊட்டி விடுவதற்காக புதிய ரோபோ ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது. கடந்த 1936ம் ஆண்டு வெளிவந்த மார்டன் டைம்ஸ் என்ற சார்லி சாப்ளினின் படத்தில் நேரத்தை மிச்சப்படுத்த தானாக உணவு ஊட்டும் இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வரும் நகைச்சுவைக் காட்சியைக் கண்டு சிரிக்காதோர் யாரும் இருந்திருக்க மாட்டார்கள்.
அந்தப் படம் வெளியாகி 86 ஆண்டுகளுக்குப் பின்னர் ஆஸ்திரேலியாவில் ஆர்எம்ஐடி என்ற பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர்கள் தானியங்கி உணவு ஊட்டும் இயந்திரத்தைக் கண்டறிந்துள்ளனர். இடுப்போடு கட்டிக் கொள்ளும் வகையில் செய்யப்பட்டுள்ள இந்த ரோபோ நமக்கு உணவூட்டும் நேரத்தை தெரிவித்து விட்டால், சரியான நேரத்திற்கு உணவை ஊட்டி விடும். இதன் மூலம் வேலை பார்த்துக் கொண்டே சாப்பிட முடியும் என்பதால் நேரம் மிச்சமாகும் என்று பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Discussion about this post