சபரிமலை சீசனை முன்னிட்டு தெற்கு ரயில்வே சார்பில் நவம்பர் 16-ம் தேதி முதல் டிசம்பர் 26-ம் தேதி வரையில் மொத்தம் 260 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. குறிப்பாக, சென்னை – கொல்லம் தடத்தில் மட்டுமே 244 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட சிறப்பு ரயில்களில் பெரும்பாலும் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளன.
பல்வேறு ரயில்வே கோட்டங்கள் சார்பிலும் சிறப்பு ரயில்களின் விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும், தெற்கு மத்திய ரயில்வே சார்பில் 18 சிறப்பு ரயில்களும், கிழக்கு மண்டல ரயில்வே சார்பில் 26 சிறப்பு ரயில்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும், சென்னை – திருவனந்தபுரம் வாரந்திர விரைவு ரயில்கள் செங்கானூர் ரயில் நிலையத்தில் தற்காலிகமாக நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post