உலகப்புகழ் பெற்ற தி லயன் கிங் படத்தின் புதிய டீசரை லட்சக்கணக்கான ரசிகர்கள் பார்த்து வருகின்றனர். டிஸ்னி நிறுவனத்தின் தயாரிப்புகளில் மிகவும் பிரபலமானது தி லயன் கிங் திரைப்படம். கார்ட்டூன் வடிவில் வந்த இந்தத் திரைப்படம் முதல் பாகம் 1994ம் ஆண்டிலும் 3ம் பாகம் 2004ம் ஆண்டிலும் வெளிவந்தது. அதன் பின்னர் தற்போது வரை அந்தப் படம் குறித்து எந்த திட்டமிடலையும் டிஸ்னி நிறுவனம் வைத்திருக்கவில்லை.
தற்போது முழுவதும் அனிமேஷன் முறையில் தயாரிக்கப்பட்டு வரும் இந்தப் படத்தை தி ஜங்கிள் புக் படத்தின் இயக்குநர் ஜான் ஃபெவ்ரோ இயக்கி வருகிறார். தற்போது வெளியான இந்தப் படத்தின் டீசரை கடந்த 24 மணி நேரத்தில் ஒரு கோடிப் பேருக்கும் அதிகமானோர் பார்வையிட்டுள்ளனர். இந்தப் படம் அடுத்த ஆண்டு ஜூலை மாதம் திரைக்கு வருகிறது.
Discussion about this post