ரன்பீர் கபூருக்கு ஜோடியாக ஆலியா பட் நடித்து வரும் படம் ‘பிரம்மஸ்தரா’. அயன் முகர்ஜி இயக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்பையில் நடைபெற்றுவருகிறது. கடந்த வியாழன் (நவம்பர் 22) இரவு நடைபெற்ற படப்பிடிப்பில் ஆலியா பட், ரன்பீர் கபூர் கலந்துகொண்டனர். சண்டைக்காட்சி படமாக்கப்பட்ட போது எதிர்பாராதவிதமாகக் கீழே விழுந்ததில் ஆலியா பட்டின் காலில் அடிபட்டது. ஆனால் காயத்தை பொருட்படுத்தாது அவர் தொடர்ந்து நடித்துள்ளார்.
ஆலியா பட், வருண் தவானுடன் இணைந்து தற்போது ‘களங்’ படத்திலும் நடித்துவருகிறார். நேற்று ‘களங்’ படக்குழுவினருடன் பீட்சா பார்ட்டியில் கலந்து கொண்ட ஆலியா பட் காலில் கட்டுபோடப்பட்டு ஊன்று கோலுடன் வந்துள்ளார்.
இதற்கு முன் மார்ச் மாதம் ‘பிரம்மஸ்தரா’ படப்பிடிப்பு பல்கேரியாவில் நடைபெற்ற போது ஆலியா பட் கலந்துகொண்டார். அப்போதும் சண்டைக்காட்சியில் நடித்த அவருக்கு வலது கை மற்றும் தோள்பட்டையில் அடிபட்டது. கை முழுவதும் கட்டுப்போடப்பட்டு மருத்துவர்கள் அவரை 15 நாள்கள் முழு ஓய்வு எடுக்க அறிவுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
ரன்பீர், ஆலியா பட்டோடு இந்தப் படத்தில் அமிதாப் பச்சன், நாகார்ஜுனா, மௌனி ராய் உள்ளிட்டோர் இணைந்து நடிக்கின்றனர். அடுத்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு இந்தப் படம் வெளியாக உள்ளது.
Discussion about this post