தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகிகளில் முதன்மை நாயகியாக இருப்பவர் நடிகை நயன்தாரா. இவருடைய நடிப்பு பல பேர் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கிறது. இவர் தொடர்ந்து நடித்து வரும் திரைப்படம் வெற்றியை மட்டுமே தேடியுள்ளது. இவர் நடித்த கோலமாவு கோகிலா திரைப்படம் மிகப்பெரிய வெற்றியையும், வசூலையும் பெற்றது.
ஒரு படத்திற்கு 4 கோடி வீதம் சம்பளம் பெற்று வந்த இவர் ‘கோலமாவு கோகிலா’ படத்திற்கு பின் ரூ.6 கோடியாக சம்பளத்தை உயர்த்தி விட்டாராம்.இதற்கு முக்கிய காரணமும் இந்த திரைப்படம் தானாம்.
அதாவது இவருடைய நடிப்பில் வெளியான ‘கோலமாவு கோகிலா’ ரூ.12 கோடி வசூல் செய்தது. மேலும் இந்த படத்துடன் வெளி வந்த பெரிய நடிகரின் படமே ரூ.9 கோடி தான் வசூல் செய்த நிலையில் தன்னுடைய சம்பளத்தை உயர்த்துவதில் தவறு இல்லை என கதை சொல்ல வரும் இயக்குநர்களிடமும் தயாரிப்பாளர்களிடமும் கூறி வருகிறாராம்.
Discussion about this post