ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படம்தான் ‘சர்கார்’. இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இத்திரைப்படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
மேலும் சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் வெளியான இந்தத் திரைப்படம், மிகப்பெரிய பொருட்செலவில் தயாரிக்கப்பட்டது. இந்த படம் திரைக்கு வருவதற்கு முன் கதைத் திருட்டு பிரச்சனையைச் சந்தித்தது. வெளியீட்டிற்குப் பின் ஆளும் கட்சியின் எதிர்ப்பை சந்தித்தது.
இவ்வாறு பல பிரச்சனையை சந்தித்த போதும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. இதுவரை இப்படம் உலகம் முழுவதும் 240 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இப்படம் தமிழகத்தில் மட்டும் தியேட்டர் ஷேர் போக, விநியோகஸ்தர் ஷேராக ரூ.70 கோடி வசூல் செய்துள்ளது.
இதுவரை மெர்சல் மற்றும் சர்கார் படங்கள் மட்டுமே இந்த சாதனையைப் படைத்துள்ளன. இதையடுத்து, ரஜினியின் எந்திரன் ரூ.62 கோடி விநியோகஸ்தர் ஷேர் கலெக்ட் செய்து, இரண்டாவது இடத்தில் உள்ளது.
Discussion about this post