‘பாகுபலி’ படத்துக்குப் பிறகு தனது அடுத்த படத்தில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். என்ற இரண்டு முன்னணி தெலுங்கு நாயகர்களை இணைத்து இயக்கப் போவதாக முதலில் அறிவித்தார் ராஜமெளலி. இதன் படப்பிடிப்பு கடந்த நவம்பர் 19-ம் தேதி தொடங்கியது.
ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோருடன் படப்பிடிப்பு தளத்தில் தான் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, அதனை உறுதிப்படுத்தினார் ராஜமெளலி.இரண்டு நாயகர்கள் மற்றும் ராஜமெளலியின் முதல் எழுத்தைச் சேர்த்து பெயரிடப்படாத இந்தப் படத்தை ‘ஆர்.ஆர்.ஆர்.’ என்று அழைத்து வருகின்றனர்.
ஆனால் தற்போது ‘ராம ராவண ராஜ்யம்’ என இந்தப் படத்துக்குத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ராமாயணத்தை மையப்படுத்தி எடுக்கப்படும் இந்தப் படத்தில், ராம் சரண் ராமனாகவும், ஜூனியட் என்.டி.ஆர். ராவணனாகவும் நடிக்கின்றனர் என்றும் தகவல் கிடைத்துள்ளது. ஆனால், அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
Discussion about this post