இதுநாள் வரை தமிழகத்தின் பல முக்கியப் பிரச்சினைகளுக்கு திமுக முன்னெடுத்த போராட்டங்களில் தோழமைக் கட்சியினர் பங்கெடுத்தனர். திமுக நடத்திய அனைத்துக் கட்சிக் கூட்டங்களிலும் அக்கட்சித் தலைவர்கள் பங்கெடுத்தனர். அதுபோன்ற அரசியல் போராட்டங்களில் எல்லாம் தோழமைக் கட்சிகளை அங்கீகரித்த திமுக, தேர்தல் நெருங்குகையில் தன் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளத் தொடங்கிவிட்டதோ என்ற கேள்வியும் எழ ஆரம்பித்துள்ளது.
திமுக வட்டாரங்களில் விசாரித்தபோது, “தேர்தல் களத்தில் திமுக இன்று பெரும்பலத்துடன் நிற்கிறது. தலைவர் இருக்கும்போதே தளபதியின் விருப்பம் என்பது திமுக அனைத்துத் தொகுதிகளிலும் தனித்து நிற்க வேண்டும் என்பதுதான். 2016ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தனித்து நின்று 135 இடங்களைப் பெற்ற பின்பும் தளபதி இதை பல நிர்வாகக் கூட்டங்களில் வலியுறுத்தியிருக்கிறார். இப்போது அதிமுக இரண்டாக இருக்கிறது. ஆட்சி மீது பெரும் அதிருப்தி இருக்கிறது.
பல நடிகர்கள் கட்சி தொடங்கிவிட்டார்கள். இந்த நிலையில் திமுக 234 தொகுதிகளிலும் தனித்து நின்று அல்லது உதயசூரியன் சின்னத்தில் நிற்க சம்மதிக்கும் கட்சிகளோடு கூட்டணி வைத்து நின்றால் என்ன என்ற எண்ணமும் தளபதி மனதில் ஓடிக் கொண்டிருக்கிறது. அதன் முன்னோட்டம்தான் துரைமுருகனின் இந்தப் பேட்டி” என்கிறார்கள்.
Discussion about this post