கஜா புயல் மீட்புப் பணி விவாகரத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அதிமுக அரசைப் பாராட்டினார். இது திமுகவுக்குப் பிடிக்கவில்லை என்றும் திமுக – மதிமுக உறவில் இது விரிசலை ஏற்படுத்துமா என்றும் தொலைக்காட்சி விவாதங்கள் சூடுபிடித்தன.
ஆனால், நேற்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, “நான் அதிமுக அரசை நல்ல விஷயங்களுக்குப் பாராட்டுகிறேன். தவறுகளைக் கண்டிக்கிறேன். நான் முதல்வருக்கு முதுகெலும்பு இல்லை என்று சொன்னேன். ஆனால், இதை எந்த மீடியாவும் வெளியிடவில்லை. அதற்கு நான் என்ன செய்வது? நாங்கள் திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம். உறுதியாக இருக்கிறோம். இதை மீடியாவால், வேறு யாராலும் தடுக்க முடியாது” என்று ஆவேசமாகக் கூறினார் வைகோ.
ஆனால் துரைமுருகனோ, ‘இப்போதைக்கு திமுக கூட்டணியில் மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் இல்லை’ என்று கூறியிருக்கிறார். ஸ்டாலினை முதல்வர் ஆக்காமல் ஓய மாட்டேன் என்று பேசிய வைகோவுக்கே இந்த நிலைமையா என்று மதிமுக நிர்வாகிகள் புழுங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
Discussion about this post