அண்மையில் சேலத்தில் ஆத்தூர் சிறுமி தலையை வெட்டி படுகொலை செய்யப்பட்டதற்கு சேலத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திய விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், ‘முதல்வரும் அந்தச் சிறுமியின் வீட்டுக்குப் போய் ஆறுதல் சொல்லவில்லை. எதிர்க்கட்சியினரும் அங்கே செல்லவில்லையே ஏன்?’ என்று ஸ்டாலினை பெயர் குறிப்பிடாமல் கேள்வி கேட்டார். இதை திமுகவினர் ரசிக்கவில்லை.
மேலும், சில நாட்களுக்கு முன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை திருமாவளவன் சந்தித்துப் பேசியதும் ஸ்டாலினுக்கு விரும்பத்தக்கதாக இல்லை என்கிறார்கள் திமுக வட்டாரத்தில். ஏற்கெனவே நடந்த திமுக உயர்நிலை செயல்திட்டக் கூட்டத்தில் திமுக கூட்டணியில் பாமகவைச் சேர்த்துக் கொண்டு, விடுதலைச் சிறுத்தைகளை வெளியேற்றலாம் என்று துரைமுருகனே பேசியதாகச் செய்திகள் பரவியது.
இதை உறுதிப்படுத்திக்கொண்ட நிலையில்தான், ‘திமுக கூட்டணியில் நாங்கள் இருக்கிறோமா என்பதை அவர்கள்தான் உறுதிப்படுத்த வேண்டும்” என்று கூறினார் திருமாவளவன். அதற்குப் பதிலாகத்தான் இப்போது துரைமுருகனே, ‘திமுக கூட்டணியில் இப்போது வைகோ, திருமாவளவன் இல்லை’ என்று கூறியிருக்கிறார்.
Discussion about this post